இந்த உலகத்தில் சிலர் கடவுள் இல்லை என்றும், சிலர் கடவுளை இருக்கிறார் என்றும், பலர் எங்களுக்குமேல் ஒரு மிகப்பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்றும் சொல்கின்றனர். ஆனால் அடியேனுக்கு கடவுளை காணும், மற்றும் உணரும், கொடுப்பனவு இருந்ததால். கடவுளை உணர்ந்தும் கண்டும் மகிழ்கிறேன். இதை தாங்களும் கண்டு, உணர்ந்து மகிழவேண்டும் என்ற அவாவில், இந்த முயற்சியை அந்த ஆதி பரம்பொருளின் பாதம் பணிந்து தொடங்குகிறேன். கடவுளைக் காண வாருங்கள்: இதற்குதேவை பொறுமை, விடாமுயற்சி, விழிப் புனற்சியுடன் எம்மை பின் தொடருங்கள்.
சிறு வயது முதல் ஸ்ரீ காளி அம்மனை உபாசனை செய்பவன் , ஸ்ரீ ரமணர் , மஹா அவதார் பாபாஜி , ஸ்ரீ வேதாத்ரி மகரிஷி , ஸ்ரீ பரஞ்சோதி மகரிஷி , ஸ்ரீ அம்மா பகவான் , ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்தர் மற்றும் பல ஞானிகளை மானசீக குருவாகக்கொண்டு , குண்டலினி யோகம் பயின்று , அதன் மூலம் தியானத்தில் இருந்து, பின் முக்தியும் பெற்று, தற்போது ஜீவன் முக்திக்கான பயிற்சியில் இருக்கும் ஒரு மாணவன்.
Sri Jayasankar